search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை கனமழை"

    • தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை தி.மு.க. அரசு முறையாக பயன்படுத்த வேண்டும் என்றார்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு முழு பொறுப்பு தி.மு.க. அரசுதான்.

    புயல் மழைக்கு அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    5 நாட்கள் கடந்த பின்பும் தற்போது வரை பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை.

    வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தி.மு.க. அரசு அலட்சியப்படுத்தியதால் தான் கடும் பாதிப்பு.

    மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்தவேண்டும்.

    தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த தேவையான ராட்சத மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருக்கவில்லை. எங்கு பார்த்தாலும் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை தி.மு.க. அரசு முறையாக பயன்படுத்த வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மழைக்காலங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம்.

    2015-ம் ஆண்டு புயல் பாதிப்பை அ.தி.மு.க. அரசு திறமையாக சமாளித்தது.

    பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள் என தெரிவித்தார்.

    • கனமழை மற்றும் காற்று காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியவில்லை.
    • வானிலை சீரானதும் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக விமான நிலையத்தில் தரையிறங்கின.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.

    சென்னை விமான நிலையத்திற்கு வரக்கூடிய ஐதராபாத், டெல்லி, மும்பை, பெங்களூரு, கவுகாத்தி, கோவா, சிங்கப்பூர், கோவை, நாக்பூர் உள்ளிட்ட 12 விமானங்கள் கனமழை மற்றும் காற்று காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி சுற்றி வந்தன.

    அதன்பின், வானிலை சற்று சீரானதும் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.

    இதேபோல் சென்னையில் இருந்து டெல்லி, ஐதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட 11 நகரங்களுக்குச் செல்ல வேண்டிய விமானங்கள் சுமார் 20 முதல் 45 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது.
    • சாலைகளின் தாழ்வான பகுதிகளை மழை நீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    சென்னை:

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் திடீரென கனமழை பெய்தது.

    சென்னை பாரிமுனை, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, ஆழ்வார் பேட்டை, அடையாறு, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம், பெசன்ட் நகர், அம்பத்தூர், ஆவடி, மயிலாப்பூர், மெரினா, சேப்பாக்கம், தியாகராய நகர், பட்டாபிராம், மதுரவாயல், போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

    இதேபோல் புறநகர் பகுதிகளான ஊரப்பாக்கம், பெருங்களத்தூர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், செங்குன்றம், மூலக்கடை, மாதவரம், கொடுங்கையூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது.

    சாலைகளின் தாழ்வான பகுதிகளை மழை நீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

    • தமிழகம், புதுவை பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
    • திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய கூடும்.

    தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தார் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

    இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை நீடித்தது. வடபழனி, கிண்டி, சைதாப்பேட்டை, தியாகராய நகர், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கத்தில், அண்ணாசாலை, ஆலந்தூர், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல் கிழக்கு கடற்கரை சாலை, திருப்போரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, சென்னை, வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 100 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள நிலையில், சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
    தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பின்பு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ., தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் கூறப்பட்டது.

    ஆனால், அதற்கு முன்பாகவே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக, தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய 16 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது.

    தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தெற்கே, தென்கிழக்கு திசையில் 100 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. 18 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை- புதுச்சேரி இடையே சென்னை அருகே நாளை அதிகாலை கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுகிறது. அதற்குப் பதிலாக ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
    கனமழை காரணமாக தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலைகொண்டுள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 120 கி.மீட்ர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 18 கி.மீட்டர் வேகத்தில் வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    சென்னையில் நாளை கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பின்பு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ., தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் கூறப்பட்டது.

    ஆனால், அதற்கு முன்பாகவே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய 16 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    தீவிரமடைந்துள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தீவிர மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
    சென்னையில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பால், குடிநீர், உணவு, காய்கறி போன்றவற்றை இருப்பு வைத்துக் கொள்ளுங்கள் என பொதுமக்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
    சென்னையில் நாளை அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்குப்பின் பெய்த அதி கனமழையால் சென்னை தத்தளித்தது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. மழை நின்ற பின்னரும் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதித்தது.

    மழை வெள்ளம் தேங்கிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு சிரமப்பட்டனர்.

    இதனால் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு குடிநீர், பால், உணவு மற்றும் காய்கறிகள் போன்றவற்றை இருப்பு வைத்துக் கொள்ளுங்கள் என பொதுமக்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

    மேலும், மழை தொடர்பான புகார்கள் மற்றும் நிவாரண உதவிகளுக்கு 1913 என எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும், 044-25619204, 044-25619206, 044-25619207, 044-25619208 என்ற உதவி எண்களையும் வழங்கியுள்ளது.
    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
    சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:-

    வடக்கிழக்கு பருவ மழையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்தின்  தற்போதைய  (மாலை 6 மணி) நிலவரம்.

    மழை நீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்:-

    வியாசர்பாடி சுரங்கபாதை, கணேஷபுரம் சுரங்கபாதை, அஜாக்ஸ் சுரங்கபாதை, கெங்கு ரெட்டி சுரங்கபாதை, மேட்லி சுரங்கபாதை, துரைசாமி சுரங்கபாதை, பழவந்தாங்கல் சுரங்கபாதை, தாம்பரம் சுரங்கபாதை, அரங்கநாதன் சுரங்கபாதை, வில்லிவாக்கம் சுரங்கபாதை, காக்கன் சுரங்கபாதை ( இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ)

    மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து தடைபெற்றுள்ளது,

    கே,கே நகர்  - ராஜ மன்னார் சாலை

    மயிலாப்பூர் - டாக்டர் சிவசாமி சாலை

    செம்பியம் - ஜவஹர் நகர் 

    பெரவள்ளுர் - 70 அடி சாலை

    புளியந்தோப்பு - டாக்டர் அம்பேத்கார் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பெரக்ஸ் ரோடு, பட்டாளம் மணி கூண்டு

    வியாசர்பாடி - முல்லை நகர் பாலம் 

    பள்ளிக்கரனை 200 - அடி சாலை  காமாட்சி மருத்துவமனை  முதல் ஈச்சங்காடு சந்திப்பு வரை ( சென்னை பெருநகர பேருந்துகள் மட்டும் செல்கிறது).

    சென்னை கோட்டை ரயில் நிலையத்திலிருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழி.

    சாலையில் குளம்போல் காட்சி அளிக்கும் வெள்ளம்

    மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடு:-

    மாதவரம் போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட எம்.ஆர்.எச் சாலை மஞ்சம்பாக்கம் ரவுண்டானாவில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் வழியில் ரெட்டேரி நிரம்பி நீரானது வெஜிடேரியன் வில்லேஜ் ரோடு வழியாக புழல் கால்வாயை அடைவதால்  எம்.ஆர்.எச் சாலையில் வெள்ளப் பெருக்கு அதிகமாக இருப்பதால் நெடுஞ்சாலைதுறை மற்றும் போக்குவரத்து காவல்துறையின் மூலம்சாலை ஒரு பக்கமாக மூடப்பட்டுள்ளது. உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் வாகனங்கள் அனைத்தும் சாலையின் ஒரேபக்கத்தின் வழியாக செல்கின்றது.

    குமணன்சாவடி குன்றத்தூர் ரோடு ஒருபுறம் மூடப்பட்டுள்ளது.

    வடபழனி முதல் கோயம்போடு செல்லும் 100 அடி சாலையில் இலகு ரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. 

    மயிலாப்பூர் ஆர்.கே மடம் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் லஸ் வழியாகவும் இலகு ரக வாகனங்கள் மந்தைவெளி மார்க்கெட் செயின்ட் மேரிஸ் சாலை வழியாக அனுப்பப்படுகிறது.

    சாலையில் பள்ளம்:-

    திருமலைப்பிள்ளைரோடு, காமராஜர் இல்லம் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வள்ளுவர்கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. வாணிமஹால்- பென்ஸ்பார்க் சந்திப்பில் வாகனங்கள் திருப்பிவிடப்படுகிறது. வள்ளுவர் கோட்டத்தில் இருந்து வாணிமஹால் செல்லும் வாகனங்கள் திருமலைப்பிள்ளை ரோட்டில் செல்லலாம்.

    மாநகர  பேருந்து  போக்குவரத்து  மாற்றம்:-

    பெரம்பூர் பேரக்ஸ் சாலை– அஷ்டபுஜம் ரோடு சந்திப்பில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், மாநகரப்பேருந்துகள் செல்ல முடியாத காரணத்தால் டவுட்டன் சந்திப்பில் இருந்து புளியந்தோப்பு நோக்கி செல்லும் மாநகரபேருந்துகள் பிரிக்கிளின்ரோடு, ஸ்டிராஹன் ஸ்ரோடு வழியே புளியந்தோப்பு சென்றடையும். அதேபோல் புளியந்தோப்பில் இருந்து டவுட்டன் செல்லும் பேருந்துகள் ஸ்டிராஹன்ஸ் ரோடு, பிரிக்கிளின்ரோடு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லும். 

    மரங்கள் விழுந்து அகற்றும் பணி 

    புதுவண்ணாரப்பேட்டை கேப்டன் மகால் அருகில் - 1 மரம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கல்லறை தோட்டத்தில் மயங்கி கிடந்த நபரை, தோளில் தூக்கிக்கொண்டு ஆட்டோவில் ஏற்றி வைத்து உயிரை காப்பாற்றிய பெண் இன்ஸ்பெக்டரை சென்னை காவல் ஆணையர் பாராட்டியுள்ளார்.
    பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி கனமழையால் சென்னை பாதிக்கப்பட்ட நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது டி.பி. சத்திரம் கல்லறை தோட்டம் அருகே பெரிய மரம் ஒன்று விழுந்து கிடப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது.

    உடனடியாக பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தன்னுடன் இருந்தவர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றார். அங்கு மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கல்லறை தோட்டத்தில் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அவரை பார்த்த உடன் பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, அருகில் சென்று உயிருள்ளதா? எனப்பார்த்தார். உயிர் இருப்பதை அறிந்த அவர், மயக்கம் நிலையில் இருந்த அந்த நபருக்கு முதலுதவி அளித்தார்.  யோசிக்காமல் உடனடியாக அவரை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு சாலைக்கு ஓடி வந்தார். பின்னர் ஒரு ஆட்டோவை நிறுத்தி, அதில் அந்த நபரை ஏற்றி மருத்துவமனைக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்தார். தற்போது அந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த நபரின் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி துரிதமாக செயல்பட்டு ஒருவரின் உயிரை காப்பாற்றியது குறித்த வீடியோ வெளியானது.  இந்த வீடியோவை பார்த்து அனைவரும் பாராட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சென்னை போலீஸ் ஆணையர், பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஆணையர் சங்கர் ஜிவால் ‘‘துரிதமாக செயல்பட்டு சுயநினைவின்றி கிடந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தற்போது அந்த நபர் உயிரி பிழைத்துள்ளார். ராஜேஸ்வரி சிறந்த அதிகாரி. எல்லா பாராட்டுகளுக்கும் உரித்தானவர்’’ என்றார்.
    சென்னையை வெள்ளத்தில் மிதக்க வைத்துள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா- வட தமிழகம் இடையே சென்னை அருகில் கரையை கடக்கும் என வானிமை மையம் தெரிவித்திருந்தது. 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர்  4 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்தது. சென்னையில் இருநது 80 கி.மீட்டர் தொலைவில் உள்ளது என வானிலை மையம் அறிவித்திருந்தது.

    சற்று நேரம் சென்ற பின்னர், கடந்த 6 மணி நேரத்தில் 16 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என்றாலும், கனமழை பெய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.
    சென்னையை வெள்ளத்தில் மிதக்க வைத்துள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், 4 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா- வட தமிழகம் இடையே சென்னை அருகில் கரையை கடக்கும் என வானிமை மையம் தெரிவித்துள்ளது. 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 4 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 80 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.

    நாளையில் இருந்து சென்னையில் படிப்படியாக மழை குறையும் என அறிவித்துள்ளது. 

    சென்னையில் தற்போது சில இடங்களில் மழை நின்றுவிட்டது. காற்று வேகமாக வீசி வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் காற்று எவ்வாறு வீசுகிறது என்பதை பார்ப்பதற்காக பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்த வண்ணம் உள்ளனர்.
    ×